Tuesday, September 01, 2015
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் வந்த 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாயக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment