Tuesday, September 01, 2015
இலங்கை இறுதி யுத்தத்தின் போது சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.என வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனால் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது. வடமாகாணசபை அமர்வுகள் இன்று ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையிலேயே இவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர். இறுதி போரில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற பிரேரணை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் சபையில் இன்று முன்மொழியப்பட்டது. குறித்த பிரேரணைக்கு சபை உறுப்பினர் வழிமொழிந்த நிலையில் தேநீர் இடைவெளியின் பின்னர் சபையில் குறித்த பிரேரணை குறித்து விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்று கடந்த காலமாக சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் முதலமைச்சரினால் குறித்த பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment