ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் இரா.சம்பந்தன் எமது செய்திப்பிரிவுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் புதிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படும் பட்சத்தில், அதற்கான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இலஞ்ச ஊழலுக்கு
இடமளிக்கக்கூடாது என்பதே ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித்
தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையாக இருந்தது என தமிழ் தேசியக் (புலி)
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மக்களின் இந்த ஆணையானது முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அந்த
ஆணையை நீடிக்கும் வகையில் மக்களின் தீர்வு அமைந்துள்ளதாகக் கருதுவதாகவும்
தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான,
சுதந்திரமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே
தமது இலக்கு எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சபாநாயகர் பதவியை ஏற்க வேண்டும் என பிரேரணை முன்வைக்கப்பட்டால்
அது தொடர்பில் கட்சி எடுக்கும் முடிவின் அடைிப்படையில் தாம்
செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment