Thursday, August 20, 2015

ஐக்கிய தேசிய (புலி)கூட்டமைப்புக்கு சபாநாயகர், 3 அமைச்சு 4 பிரதி அமைச்சுப் பதவியாம்!!?

Thursday, August 20, 2015
ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு இணைத்து ஆட்சியமைத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவியும், 3 அமைச்சர் பதவிகளும் மற்றும் 4 பிரதி அமைச்சர் பதவிகளும் கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது:
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அமைச்சு பதவிகளையும் பெறாது. எம்மை மக்கள் தெரிவு செய்தமை மக்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அமைச்சுப் பதவிக்கு அல்ல என அவர் குறிப்பிட்டார்.
 
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுடன் தொடர்பு கொண்டபோது அவர், நாம் எவ்வித ஒப்பந்தத்தையும் செய்யவில்லையெனவும் அப்படியொரு தீர்மானம் எட்டப்படவில்லையெனவும் எங்கள் தேசம் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment