Friday, August 21, 2015

தண்ணீரிலே மிதக்கின்றது (புலி)கூட்டமைப்பு!

Friday, August 21, 2015
தமிழ் இளைஞர்களை இராணுவம் மதுபானம் வழங்கி சீரழித்துவருவதாக உதயன் நாளிதழ் கவலை தெரிவித்து வருகின்றது.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உதயன் பத்திரிகை நிறுவனர் ஈ.சரவணபவனோ தென்மராட்சி இளைஞர் அணி , கைதடி குமரநகர் இளைஞர் அணியினை சேர்ந்த இளைஞர்களுக்கு யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று  இரவு மது விருந்து அளித்துள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
 
கூட்டமைப்பின் வேட்பாளர்களுள் ஒருவரான அருந்தவபாலனுக்கு கிடைக்க வேண்டிய ஆசனம் தான் சரவணபவனுக்கு முறையற்ற விதத்தினில் மாற்றப்பட்டதாக தென்மராட்சி மக்கள் கூட்டமைப்பின் தலைமை மீதும் சரவணபவனின் மீது கடும் அதிருப்தியினில்; உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றும் தென்மராட்சியை சேர்ந்த இளைஞர்குழு ஒன்று அருந்தவபாலனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கெண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரி சூழலில் குழுமி இருந்தனர். அந்த இளைஞர் குழு தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சரவணபவன் வெளியே வரும் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தது. அதனை கேள்வியுற்ற சரவணபவன் முன்னாள் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தனை அழைத்து எவ்வாறாவது அந்த இளைஞர் குழுவை பேசி அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு பணிந்திருந்தார்.
 
 
சரவணபவனின் பணிப்பனை அடுத்து அவ்விடத்திற்கு சென்ற சுகிர்தன் அந்த இளைஞர் குழுவை சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

அன்றைய தினம் இரவு மீண்டும் யாழ்.மார்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் கூடிய இளைஞர் குழு அருந்தவபாலனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் மாவையிடம் கேள்வி எழுப்பி போராட்டங்களினில் குதித்திருந்தனர்.அவ்வேளை மாவை.சேனாதிராசா அருந்தவபாலனுக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இளைஞர்களிடம் கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று இருந்தனர்.

 
தற்போது தென்மராட்சி மக்கள் அனைவரும் அருந்தவபாலனுக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் போராட்டங்கள் முன்னேடுக்கபப்டும் என எச்சரித்து வருகின்றனர்.
ந் நிலையில் தென்மாராட்சி பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை தம் பக்கம் இழுக்கும் செயற்பாட்டில் தற்போது சரவணபவன் இறங்கியுள்ளார்.அதில் ஒரு கட்டமே ரில்கோவில் தென்மராட்சி இளைஞர்கள் சிலரை அழைத்து மது விருந்து அளித்துள்ளார்.
 
மது போதையில் இருந்த இளைஞர்களிடம் தான் மோசடி மூலம் ஆசனத்தை பெற்றுக்கொள்ளவில்லை நேர்மையான முறையிலையே ஆசனம் கிடைத்ததென கூறியுள்ளார்.அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினராலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய ஒரு ஆசனம் 7 வாக்குகளால் ஐக்கிய தேசிய கட்சிக்கு போனது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வழமை போன்றே இந்த தேர்தலையும் புறக்கணித்து இருந்தால் அந்த ஆசனமும் எமக்கு கிடைத்து இருக்கும் அருந்தவபாலனும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருப்பாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தொடர்பில் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
 
அத்துடன் அருந்தவபாலனுக்கு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்க வேண்டும் என நானும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன் எனவும் அந்த இளைஞர்களுக்கு தெரிவித்ததாக அருந்தவபாலனின் ஆதரவாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment