Sunday, August 02, 2015
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு
ஏற்ற வகையில் பரந்த அளவில் தொழில்நுட்ப மற்றும் நிதிகளை வழங்க ஐக்கிய
நாடுகள் சபை முன்வந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் மற்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரதி செயலாளர் நாயகம் ஆகியோரின் உறுதி மொழிக்கு ஏற்ப, இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த உதவிகள் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் தெரிவித்தார்.
போர்க்குற்றங்கள் குறித்து பொறுப்புக் கூறல் விடயத்தில், சர்வதேச பொறிமுறைக்கு மாறாக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமுல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த உதவிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என ஊடகவியலாள ஒருவர் வினவிய போதே பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கமும், இலங்கை மக்களும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவும் என தெரிவித்த பேச்சாளர் வடமாகாண முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைய தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம் சமாதான முயற்சிகளில் வடமாகாண மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கான உதவிகளும் அதில் அடங்கும் என பேச்சாளர் குறிப்பிட்டார்.
சமாதானத்தை கட்டியெழுப்புதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், குற்றம் புரிந்தவர்கள் தணிடிக்கப்படாமல் உள்ள நிலைமையை அகற்றல் போன்ற விடயங்களுக்கும் இந்த உதவிகள் பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர, இலங்கையில் மேற்கொள்ளப்படப் போவது உள்நாட்டு பொறிமுறையா அல்லது சர்வதேச பொறிமுறையா எனபது குறித்து தீர்மானிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும் எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment