Sunday, August 02, 2015
காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு, எதிர்வரும் திங்கட்கிழமை
இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார
அமைச்சு அறிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு வரும்
ஓகஸ்ட் 3ம் நாள் தொடக்கம் 10 நாட்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்ளத்
திட்டமிட்டிருந்தது.
எனினும், வரும் 17ம் நாள் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல்
நடைபெறவுள்ளதால், இந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிவிவகார
அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பின்னரே இந்தக் குழுவின் பயணம் தொடர்பான தீர்மானம்
எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேரதல் பரப்புரைகள் நடந்து கொண்டிருக்கும் போது. ஐ.நா குழு பயணம்
மேற்கொள்வது நெருக்கடியானதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அமைச்சர்களை
சந்தித்து, பிரச்சினைகளை அணுகுவது கடினமானது.
எனவேதான் தேர்தல் முடியும் வரை ஐ.நா குழுவின் பயணம்
பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment