Sunday, August 2, 2015

சரியான அரசியல் தலைமைகளை தெரிவு செய்வதில் அவதானம் தேவை - டக்ளஸ்!

Sunday, August 02, 2015
சரியான அரசியல் தலைமைகளை மக்கள் தெரிவு செய்யும் பட்சத்திலேயே தமக்கான வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உற்சாகமும், தன்னம்பிக்கையும் தான் ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்க வேண்டிய குணாம்சமாக இருக்க வேண்டுமென்பதுடன் வெற்றியே அவனது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை கொண்டிருக்க வேண்டுமென்பதுடன் தோல்வி என்பது வெற்றியின் முதற்படியாக கருத வேண்டியது அவசியமானது என்றும் டக்ளஸ் தேவாநந்தா குறிப்பிட்டுள்ளார்.
         

No comments:

Post a Comment