Sunday, August 2, 2015

மஹிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் அலுவலகத்தினுள் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது!

Sunday, August 02, 2015
குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் அலுவலகத்தினுள் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அவர் அரசாங்க இரகசிய புலனாய்வு சேவை அதிகாரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவின் மனைவி மஞ்சுல திஸாநாயக்கவின் அழைப்பினாலே, குறித்த இரகசிய புலனாய்வு சேவை அதிகாரி அவ்விடத்திற்கு சென்றுள்ளதாக காவல்துறை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த இரகசிய புலனாய்வு சேவை அதிகாரி, சாலிந்த திஸாநாயக்கவுக்கு நெருங்கிய ஒருவர் என தெரியவந்துள்ளது.எப்படியிருப்பினும், மஹிந்த ராஜபக்சவை கொலை செய்யும் சூழ்ச்சி திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அரசாங்கத்திற்கு இத்திட்டத்துடன் தொடர்பிருப்பதாக மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment