Saturday, August 1, 2015

கனடா வாகனம் காப்புத்தண்டவாளத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கோர விபத்து.மூவர் மரணம்!

Saturday, August 01, 2015
கனடா- வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காப்பு தண்டவாளம் ஒன்றுடன் மோதி தீப்பிடித்து எரிந்த கோர விபத்து பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் சனிக்கிழமை அதிகாலை 4மணியளவில் நடந்துள்ளது.
நெடுஞ்சாலை 427வடக்கு சரிவுப்பாதையில் இருந்து நெடுஞ்சாலை 401 மேற்கில் இந்த விபத்து நடந்துள்ளது.
இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மூன்றாவது நபர் அருகில் நின்றவர்களால் வாகனத்திற்குள் இருந்து வெளியே இழுத்து எடுக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதும் அவருக்க ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.
விபத்திற்கான காரணம் இன்னமும் தீர்மானிக்கப் படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். மது சோர்வு திசை திருப்ப பட்டமை அல்லது வேறு எந்த வகையான காரணம் என்பது தெரிய வரவில்லை

No comments:

Post a Comment