Sunday, August 02, 2015
பாகிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20
ஓவர் சர்வதேச போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த
இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. அறிமுக வீரர்
ஷெஹன் ஜெயசூர்யா 40 ரன்களும், கபுகேதரா 48 ரன்களும் (25 பந்து, 2 பவுண்டரி,
4 சிக்சர்) விளாசினர்.
அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 40 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (7.2 ஓவர்) இழந்து திணறியது. இதன் பிறகு பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை தூக்கி நிறுத்தினர். கேப்டன் அப்ரிடி 45 ரன்களும் ( 22 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), அன்வர் அலி 46 ரன்களும் (17 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாச பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோ வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தை இமாத் வாசிம் (24 ரன், 14 பந்து) சிக்சருக்கு பறக்க விட்டு, பாகிஸ்தானுக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார்.
பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே டெஸ்ட் (2-1) மற்றும் ஒரு நாள் தொடரையும் (3-2) பாகிஸ்தான் வென்று இருந்தது.

No comments:
Post a Comment