Sunday, August 02, 2015
ஜம்மு:காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் சமீப
காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட 18
தாக்குதல்களில், இந்திய வீரர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதுடன், 14
பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட அக்னூர் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 10.40 மணியளவில் பாகிஸ்தான் படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
சிறிய ரக பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களால் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரின் 3 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்திய வீரர்களும் அதே வகையிலான ஆயுதங்கள் மூலம் திருப்பி தாக்குதல் நடத்தினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே சுமார் 1 மணி நேரம் தாக்குதல் நடந்தது. எனினும் இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலால் காஷ்மீர் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment