Saturday, August 01, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவர்கள் மட்டுமே நாடாளுமன்றம் செல்வார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நாம் அனுராதபுரம் கூட்டத்தில் மக்கள் எமக்கு காட்டும் ஆதரவினை வெளிப்படுத்தினோம்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் மஹிந்த ஐயாவிற்கு எதிராக செயற்படுகின்றனர். அவ்வாறான நபர்களினால் அவர்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூக்குரல் எழுப்புகின்றார்கள். அதுவே தற்போதைய நிலைமையாகும்.மஹிந்தவை நேசிப்போர் மட்டுமெ இம்முறை நாடாளுமன்றம் செல்வார்கள். ரணில் என்ன கேம் ஆடினாலும் நாம் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சி அமைப்போம்.
ரணில், அதிர்ஸ்டத்தில் பிரதமராக மாறினார். மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் பிரதமராக பதவி வகிக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார்.
அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எஸ்.எம். சந்திரசேன தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்....
அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
94ம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது நாம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கினோம்.ஐக்கிய தேசியக் கட்சி குறுகிய காலத்தில் 400க்கும் மேற்பட்ட மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
எனினும் மஹிந்த ராஜபக்ச காலத்தில் ஒரு அனுமதிப்பத்திரமேனும் வழங்கப்படவில்லை.ஒடிகொலோன், வாசனைத் திரவியங்களை உற்பத்தி செய்ய எதனோல் இறக்குமதி செய்யப்படுகின்றது.
அவ்வாறு இறக்குமதி செய்து அவற்றை சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக விற்பனை செய்கின்றனர்.
இதனால் 300, 400 வீதம் வரையிலான லாபமீட்டப்படுகின்றது.
பழைய வானகங்களை இறக்குமதி செய்ய சுமார் 4000 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தின் ஊடாகவும் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிக்கப்படுகின்றது.இதன் காரணமாகவே மஹிந்த மைத்திரி இணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென விரும்புகின்றோம்.
கட்சியை ஒன்றிணைத்து நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம் ஒன்றை சொல்ல வேண்டும், ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசாங்கமொன்றை அமைக்க நாம் எந்த வகையிலும் இடமளிக்க மாட்டோம் என எஸ்.பி. திஸாநாயக்க யட்டிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment