Saturday, August 1, 2015

மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலி பயங்கிரவாதத்தை அழித்து அமைதி திரும்பியது: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

Saturday, August 01, 2015
மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலி பயங்கிரவாதத்தை அழித்து அமைதி திரும்பியது: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
குலியாபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

புலிகளை மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கமே தோற்கடித்திருந்தது.

இதன் காரணமாகவே தற்போது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பலகுதிகளில் அமைதி நிலவுகிறது.

மகிந்தவின் வாக்குறுதிகள் தேர்தல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை இல்லை.

நாட்டின் அமைதிக்கும், அபிவிருத்திக்கும் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முக்கியமானது என்று அவர் குறிப்பிடடுள்ளார்...
 
சர்ச்சைக்குரிய போதைப்பொருள் கடத்தல் மன்னான மொஹமட் முஜாஹிட் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
 
குடு ராஜா என அழைக்கப்படும் மொஹமட் முஜாஹிட்டை, செல்வம் திரைப்படத்தின் முதல் நாள் காட்சி இடம்பெற்ற ரீகல் சினிமா தியேட்டரில் கண்டேன்.
 
காவல்துறை ஊடக பேச்சாளர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினால் அவரை குடு ராஜா என அறிமுகப்படுத்தி வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்நிகழ்விற்காக அந்த காலக்கட்டத்தில் சேவையில் இருந்த ஆயுதப் படை வீரர்கள், காவல்துறையினர், பாதுகாப்பு படை பிரதானிகள் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினரான மாலினி பொன்சேகாவும் கலந்து கொண்டனர்.
 
செல்வம் திரைப்படத்தை இயக்கிய சஞ்ஜய லீலாரத்னவினால் அதன் தயாரிப்பாளர் என நபர் ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், தான் அவருக்கு கை கொடுத்ததாகவும் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர், லீலாரத்னவிடம் விசாரணைகளை மேற்கொண்டால் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புனர்வாழ்வளிக்கப்பட்ட  புலி உறுப்பினரான ஷாந்தி லிங்கம் கோகுலராஜாவினால் முக்கிய கதாபாத்திரம் பிரதிநிதித்துவப்பட்டதனால் பாதுகாப்பு அமைச்சு திரைப்பட திரைப்பட ஊக்குவிப்புக்கு ஆதரவு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
போதை பொருள் வியாபாரியாக பெயரிடப்பட்டுள்ள மொஹமட் முஜாஹிட் அதுவரையில் மலேசியா அரசாங்கத்தினால் முக்கிய நபர் என பெயரிடப்பட்டிருந்ததா என கோத்தபாய ராஜபக்சவிடம் வினவப்பட்டுள்ளது.
 
தன்னை அவமரியாதையாக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் புகைப்படம் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment