Saturday, August 1, 2015

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்வதில்லை என்பது குறித்து விக்னேஸ்வரனிடம் விளக்கம் கோரப்படும்: சம்பந்தன்!

Saturday, August 01, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்வதில்லை என்று அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

இது குறித்து தேர்தல் நிறைவடைந்த பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே வடமாகாண சபைக்கான முதலமைச்சராக தெரிவாகி இருந்த போதும், இந்த தேர்தலில் யாரையும் ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று சீ.வி.விக்னேஸ்வரன் கூறி இருந்தார்.

இந்த முறை தேர்தலில் விருப்பு வாக்கு வழக்கம் உள்ள நிலையில், பிரசாரம் செய்தால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் கூற வேண்டி இருக்கும் என்ற அடிப்படையிலேயே அவர் இதனைத் தவிர்த்திருக்கலாம் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment