Saturday, August 1, 2015

சூப்பர் சிங்கர் பாடகர்களை வைத்து யாழ்ப்பாணத்தில் வாக்கு வேட்டையாடும் ஐக்கிய தேசியக் கட்சி !

Saturday, August 01, 2015
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமான பாடகர்கள் சிலரும் பங்கேற்றிருந்தது, தமிழர்கள் மற்றும், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் காலூன்ற முனையும்  பேரினவாதக் ஐக்கிய தேசியக் கட்சி  ஒன்றுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் பங்கேற்றமைக்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டத்திலேயே இவர்கள் தோன்றியிருந்தனர்.

No comments:

Post a Comment