Saturday, August 01, 2015
எந்த அரசியல் கட்சிக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதனை எதிர்வரும் 18 ஆம் திகதி காலை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன புரிந்துகொள்வார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மிகவும் பலமான முறையிலேயே தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றது என்று முன்னாள் அமைச்சரும் ஐ.ம.சு.மு.வின் கண்டி மாவட்ட வேட்பாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தான் நிச்சயம் தோல்வியடைந்துவிடுவேன் என்பதனை மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்துகொண்டுள்ளார் என்றும் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக பிளவுபட்டுள்ளதாகவும் கட்சிக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். ராஜித்த சேனாரட்ன போன்றவர்களின் கொள்கைகள் குறித்து முழு நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். களுத்துறையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எந்த அரசியல் கட்சிக்கு தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதனை எதிர்வரும் 18 ஆம் திகதி ராஜித்த சேனாரட்ன புரிந்துகொள்வார். மக்கள் யாருக்கு மண்சரிவு ஏற்பட்டது என்பதனை வெளிக்காட்டுவார்கள்.
இதேவேளை எமது தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஐககிய மக்கள் சுதந்திர முன்னணி சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றது. எமது வெற்றியானது மக்களினால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறந்த பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது. அதாவது எமது தவறுகள் என்ன என்பதும் எமது பலவீனம் மற்றும் எந்த இடத்தில் நாங்கள் திருத்தங்களை செய்யவேண்டியுள்ளது என்பது குறித்தும் நாங்கள் நன்றாக பாடங்களை கற்றுள்ளோம்.எனவே நாங்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைத்ததும் இந்த ஆறு மாதங்களில் கற்ற பாடங்களை பாடமாகக்கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment