Sunday, August 2, 2015

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்பந்தனின் உசுப்பேத்தி நம்பவைத்து வாக்குகளைச் சுரண்டும் தந்திரம்:வித்­தி­யா­தரன்!

Sunday, August 02, 2015
இரு­பது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தாருங்கள். 2016 இல் தீர்வைத் தரு­கிறோம் என்ற பாணியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து மீண்டும் ஒரு தடவை தமி­ழர்­களை உசுப்­பேத்தி, நம்­ப­வைத்து வாக்­கு­களைச் சுரண்டும் தந்திரமின்றி வேறில்லை என  ஊட­க­வி­ய­லா­ள­ர் என்.வித்­தி­யா­தரன் குற்றம் சுமத்­தி­னார்.

2016 இல் தீர்வைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான தனது திட்டம், தந்­தி­ரோ­பாயம், உத்தி குறித்­தெல்லாம் வெளிப்­ப­டை­யாக எதுவும் சொல்­லாமல் மீண்டும் ஒரு தடவை ஏமாற்று வாக்­கு­று­திகள் மூலம் பாராளு­மன்றக் கதி­ரை­களைக் கைப்­பற்ற அவர் எத்­த­னிக்­கின்றார்.

இவ் விடயம் குறித்து  முன்னாள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் வித்தியாதரன் மேலும் தெரிவித்­தவை வரு­மாறு,

பாரா­ளு­மன்றக் கதி­ரை­களை அடையும் நோக்­கோடு தமி­ழர்­க­ளுக்குத் தனி­நாடு என்ற உசுப்­பே­த்­தலை எழு­ப­து­களில் முன்­வைத்த மித­வாதத் தலை­வர்கள், அந்த இலக்கை அடை­வ­தற்­காக எது­வுமே செய்­ய­வில்லை. வெற்றுக் கோஷங்­களை முன்­வைத்து, இளை­ஞர்­க­ளையும் மக்­க­ளையும் தூண்­டி­விட்டு தாங்கள் பதவி சுகம் அனு­ப­வித்­த­மையைத் தவிர. அப்­போது முதல் ஒரு சில தமிழ்த் தலை­வர்கள் தாங்கள் ‘வாழ்நாள் எம்.பிக்­க­ளாக’ பத­வி­களை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருப்­ப­தற்­காக ஒவ்­வொரு தட­வையும் பாரா­ளு­மன்றத் தேர்தல் வரு­கின்­ற­போ­தெல்லாம் ‘ஐக்­கியம்’, ‘ஒற்­றுமை’, ‘ஒன்­று­பட்ட சக்தி’ என்­றெல்லாம் பேசு­வார்கள். இது வழமை இதைத்தான் இப்­போதும் செய்­கின்­றார்கள்.

தங்­க­ளுக்குள் ஒன்­று­பட்டு ஓர் அர­சியல் கட்­ட­மைப்­பையே நிறுவி அதனைக் கொண்டு நடத்த லாயக்­கற்­ற­வர்கள் மக்­களைப் பார்த்து நீங்கள் ஒன்­று­பட்டு எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்கள், தீர்வைத் தரு­கிறோம் எனப் பூச்­சாண்டி காட்ட முயல்­கி­றார்கள். எழு­ப­து­களின் இறு­தி­யிலே யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற மே தினக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் அமிர்­த­லிங்கம், ‘அடுத்த மேதினம் தமி­ழீ­ழத்தில்’ என்று அறி­வித்தார். அதே­பா­ணியில் இப்போது சம்­பந்தன் அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­திக்குள் – 2016 இல் – தீர்வு என அறி­விக்­கின்றார்.

ரணில், சந்­தி­ரிகா, மைத்­திரி அணி­யுடன் சேர்ந்து ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து மஹிந்­தவை அனுப்பும் முயற்­சியில் சம்­பந்­தனும் ஈடு­பட்டார் என்­பது உண்­மையே. அவர் அன்று என்ன முடிவை எடுத்­தி­ருந்­தாலும், அதற்கு முன்­னரே மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பு­வதில் தென்­னி­லங்­கை­யுடன் ஒன்­று­ப­டு­வது என்ற தீர்­மா­னத்தை வடக்கு, கிழக்குத் தமி­ழர்கள் எப்­போதோ – சம்­பந்தன் அணி அந்தத் தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தற்கு முன்­னரே  எடுத்­து­விட்­டனர்.

ஆனால், இப்­போது தென்­னி­லங்கை நிலைமை மாறி­விட்­டது. ரணில் – மைத்­திரி தரப்­புக்கு பெரும் சவால் விடும் அர­சியல் தலை­மை­யாக மீண்டும் மஹிந்த கிளம்­பு­கின்றார் என்று தென்­னி­லங்கை செய்­திகள் கூறு­கின்­றன. அதை மீறி ரணில் – மைத்­திரி தரப்பு பாராளு­மன்ற தேர்­தலில்                   முன்­ன­ணிக்கு வந்­தாலும் அந்தத் தரப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் சாதா­ரண பெரும்­பான்­மையைத் திரட்டி அரசு அமைப்­பது கூட கஷ்­ட­மான விடயம் என்றே ஆரூடம் கூறப்­ப­டு­கின்­றது.

அர­சியல­மைப்பு மாற்­றப்­பட அல்­லது திருத்­தப்­பட வேண்டும். தனித்துப் பெரும்­பான்மை பெறவே அல்­லாடும் ஓர் அர­சியல் தலை­மையைத் தென்­னி­லங்­கையில் வைத்­துக்­கொண்டு அரசமைப்பை மாற்­று­வ­தற்­கான மூன்றில் இரண்டு பங்கு ஆத­ரவை மஹிந்த தரப்பு நாடா­ளு­மன்­றத்தில் கணி­ச­மான இடத்­தைப்­பெ­றலாம் என்று கணிக்­கப்­படும் சூழலில்  
அதைப்­பற்­றி­யெல்லாம் எதுவும் விளக்கம் தராமல் இரு­பது எம்.பிக்­களைத் தாருங்கள், அடுத்த ஆண்டில் தீர்வு என்ற சம்­பந்தனின் பேச்சு மந்­தி­ரத்தில் மாங்காய் பறிக்கும் சுத்­து­மாத்­தின்றி வேறில்லை.

மீண்டும் ஒரு தடவை பொதுத் தேர்­தலில் மக்­களைச் சந்­திக்கும் உத்­தேசம், – தேவை, -எதிர்­பார்ப்பு – வாய்ப்பு – சம்­பந்தனுக்கு இல்­லாமல் இருக்­கலாம். அத­னால்தான் திரும்­பவும் மக்­களைச் சந்­தித்து வாக்குக் கேட்­க­வேண்டி நேராது எனக் கருதி எதுவும் பேசலாம், எப்­ப­டியும் வாக்­கு­றுதி வழங்­கலாம் என்று நினைத்து இப்­படி ஓராண்டு காலக்­கெடு குறிப்­பிட்டு, நம்­பிக்கை ஊட்டி, இந்தத் தடவை மீண்டும் வாக்­குத்­தி­ரட்டி பத­வி­களைப் பிடித்­துக்­கொள்­ளலாம் என்று எண்ணிக் கரு­ம­மாற்­று­கின்றார்


போலும் அவர். ஆனால் மீண்டும் ஒரு தடவை பொதுத்­தேர்­தலில் பொது­மக்­களைத் தாங்கள் சந்­திக்­க­வேண்­டி­யி­ருக்கும் என நம்பும் ஏனைய கூட்­ட­மைப்பு தலை­வர்கள் இந்த 2016 காலக்­கெடு விட­யத்தை அமர்த்தி – அமுக்கி – வாசிக்­கின்­றார்கள். அது குறித்துப் பேசு­வ­தில்லை.என
வித்­தி­யா­தரன் குற்றம் சுமத்­தி­னார்.

No comments:

Post a Comment