Saturday, August 1, 2015

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் வடக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு:ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்!

Saturday, August 01, 2015
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் வடக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப மற்றும் நிதியியல் ரீதியான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை முடிவுக்குக்கொண்டு வருதல், சமாதானத்தை கட்டியெழுப்புதல், இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல் போன்ற அனைத்து விவகாரங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் உள்ளக விசாரணைப் பொறிமுறைமையா அல்லது சர்வதேச விசாரணையா என்பது நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுதவல் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியிருந்தார்.

No comments:

Post a Comment