Saturday, August 1, 2015

கொலம்பியாவில் ராணுவ விமானம் நொறுங்கியது: 12 வீரர்கள் பலி!

Saturday, August 01, 2015
பகோடா: கொலம்பியாவில் ராணுவ சரக்கு விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. லஸ் பலோமஸ் பகுதியில் சென்ற போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
 
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 12 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு கொலம்பியா அதிபர் ஜீயான் மானுவேல் சான்டோஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கு என்ஜின் கோளாறு என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment