Saturday, August 01, 2015
லண்டன்:இங்கிலாந்தில் உள்ள
பிளாக்புஷ் விமான நிலையத்தில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டது.
அதில் 3 பயணிகளும், ஒரு விமானியும் இருந்தனர்.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நெறுங்கியது. இதனால் தீப்பிடித்து எரிந்தது.
இந்த
விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 4 பேரும் பலியாகினர்.
முதலில் அவர்கள் யார் என தெரியவில்லை. இதற்கிடையே இங்கிலாந்துக்கான சவுதி
அரேபிய தூதர் இளவரசர் முகமது பின் நவாப் அல் சவுத் டுவிட்டரில் ஒரு இரங்கல்
செய்தி வெளியிட்டுள்ளார்.
அதிலிருந்து விமான விபத்தில் பலியானவர்கள்
பின்லேடன் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. அதே போன்று மற்றொரு சவுதி
அரேபிய இளவரசர் முகமது பின் நவாப் பின் அப்துல் அசீஷ் பின்லேடன்
மகன்களுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹாம்ப்ஷிர்
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்தில் இறந்த பின்லேடன் உறவினர்களின் உடல்களை விரைவில் ஒப்படைக்க
இங்கிலாந்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment