Monday, August 03, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் காவற்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.மகிந்த ராஜபக்ச குருணாகல் தேர்தல் அலுவலகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான நபர் சென்றிருந்த சம்பவத்தை சிறிய சம்பவமாக எடுத்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்றவர்களின் அடையாளங்கள் குறித்து விசாரித்த போது, ஒருவர் தப்பிச் சென்றிருந்தார். சில தினங்களாக அந்த நபர் குறித்த அலுவலகத்திற்குள் வந்து சென்றதாகவும் தகவல் உள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கம்,
பிரபாகரனின் இறுதியை ஆசையை நிறைவேற்றவே தான் குருணாகல் மாவட்டத்திற்கு வந்ததாக கூறியிருந்தார்.
இவை அனைத்தையும் நோக்கும் போது, மகிந்த ராஜபக்சவின்
பாதுகாப்பு குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது. அந்த சம்பவத்தை சிறிய சம்பவமாக எடுத்து கொள்ள முடியாது என்பதே இதற்கு காரணம் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment