Monday, August 03, 2015
புதுடில்லி:நாட்டில் அதிக அளவில் நடைபெறும், பெண்களுக்கு எதிரான
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அடிப்படை காரணங்களில் முக்கியமானதாகக்
கருதப்படும், செக்ஸ் இணையதளங்களை, மத்திய அரசு நேற்று திடீரென தடை செய்தது.
'பலான' இணையதளங்களைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள், இந்த
நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர்; தங்கள் கோபத்தை, சமூக வலைதளங்களில்,
கண்டனமாக பதிவு செய்து தீர்த்தனர்.
நேற்று முன்தினம், அதாவது
சனிக்கிழமை நள்ளிரவில், தங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் அல்லது கையில்
இருந்த மொபைல் போன்களில், செக்ஸ் இணையதளங்களை தொடர்பு கொண்டவர்களுக்கு,
ஏமாற்றம் கிடைத்தது.
'பலான' காட்சிகள்:
அந்த
இணையதளங்களில் உள்ள, 'பலான' காட்சிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம் என
நினைத்தவர்களுக்கு சோகம் ஏற்பட்டது.அத்தகைய இணையதளங்களில் வழக்கமாகக்
காணப்படும், ஆண் - பெண் வீடியோ காட்சிகளுக்குப் பதிலாக, ஒன்றுமே இல்லாமல்,
வெற்று ஸ்கிரீன் மட்டும் தெரிந்தது.அத்தகையவர்கள், நேற்று காலை மீண்டும்,
'அந்த' இணையதளங்களை தொடர்பு கொண்ட போது, அந்த தளங்கள், மத்திய அரசால்
முடக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.
குறிப்பாக,
பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., ஆகிய பொதுத்துறை தொலை தொடர்பு
நிறுவனங்கள், வோடபோன், ஹாத்வே, ஏ.சி.டி., போன்ற தனியார் மற்றும் பன்னாட்டு
தொலை தொடர்பு நிறுவனங்களில் வெளிவந்து கொண்டிருந்த செக்ஸ் இணையதளங்கள்
முடக்கப்பட்டிருந்தன.இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள், தங்கள் ஊரில் மட்டும்
தான், அத்தகைய இணையதளங்கள் முடக்கப்பட்டனவா அல்லது எல்லா ஊர்களிலும்
தெரியவில்லையா என அறிய ஆசைப்பட்டனர். இணையதளங்கள் மூலம், 'குறிப்பிட்ட சில,
செக்ஸ் இணையதளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவை, உங்கள் ஊரில்
தெரிகின்றனவா?' என, கேள்வி எழுப்பினர். கோல்கட்டா, மும்பை, பாட்னா, சென்னை
என, பல நகரங்களில் உள்ள, செக்ஸ் இணையதள விரும்பிகள், 'எங்களுக்கும்
தெரியவில்லை' என, பதிலளித்தனர்.
அதையடுத்து, தங்கள் கோபத்தை சமூக வலைதளங்கள் மூலம் காட்டினர். அடிப்படை உரிமை
'ஆபாச
இணையதளங்களை முடக்கியது, எங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல்.
நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? எதற்காக, எங்களின் விருப்பமான தளங்களை,
மத்திய அரசு முடக்கியது?' என, கேள்வி எழுப்பினர்.எனினும், நேற்று நள்ளிரவு
வரை, பெரும்பாலான
முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில், பலான இணையதளங்கள் தெரியவில்லை.
எனினும், ஏர்டெல், டிகோனா, எம்.டி.எஸ்., போன்ற தொலை தொடர்பு நிறுவனங்களில், தங்கு
தடையின்றி, செக்ஸ் இணையதளங்கள் செழிப்பாக தெரிந்தன.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு:
'செக்ஸ்
இணையதளங்களைப் பார்த்து, இளைஞர்கள் கெட்டுப் போகின்றனர்; எனவே, அந்த
தளங்களை தடை செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், கடந்த மாதம் வழக்கு
தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து தன் உத்தரவில் கூறியதாவது:
இது
தொடர்பாக கோர்ட் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும்! இதில் மத்திய அரசு
தான் தலையிட வேண்டும். நான்கு அறைகளுக்குள் இருந்தவாறு, ஒருவர், செக்ஸ்
இணையதள காட்சிகளைப் பார்க்கிறார் என்றால், அதில் என்ன தவறு
இருக்கிறது?செக்ஸ் இணையதளங்களுக்கு தடை விதிப்பது, அரசியல் அமைப்புச்
சட்டத்தின், 21வது பிரிவு வழங்கும் தனி நபர் உரிமையை மீறும் செயலாக அமைந்து
விடும்.இவ்வாறு, தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்தியர்கள் அதிகம்:
'போர்ன்ஹப்'
எனப்படும், மிகவும் பிரபலமான செக்ஸ் இணையதளம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளி
விவரத்தில் கூறப்பட்டிருந்ததாவது: உலகம் முழுவதும் எங்களின் இணையதளம்,
நாள் ஒன்றுக்கு, 1,400 முறை திறந்து பார்க்கப்படுகிறது. அதில், 40 சதவீதம்,
இந்தியாவிலிருந்து நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, வட கிழக்கு
மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான், எங்களின்
முக்கியமான வாடிக்கையாளர்கள். அதற்கு அடுத்த இடத்தில், டில்லி ரசிகர்கள்
உள்ளனர்.மேலும், இந்தியாவில், செக்ஸ் இணையதளங்களைப் பார்க்க
விரும்புபவர்கள், நடிகை சன்னி லியோனின், செக்ஸ் வீடியோ காட்சிகளைப்
பார்க்கவே ஆசைப்படுகின்றனர். இவர், கனடாவில் பிறந்த இந்தியர். சமீபகாலமாக
பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு, அந்த செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment