Sunday, August 2, 2015

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் வேரூன்றிவிட்டது - சுப்பிரமணிசாமி!

Sunday, August 02, 2015
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றி விட்டதாக பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில், இறுதியாக ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகளை நமது அரசு கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை துவக்க நிலையிலேயே கிள்ளி எறியவேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம்.
 
இதனை அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியசாமி தனது டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இயக்கமானது தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேரூன்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment