Sunday, August 23, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கலந்தாலோசிக்காமலேயே முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேசிய அரசாங்கம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை மக்கள் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் அங்க வகிக்கின்றன.
இந்தநிலையில், இரண்டு வருடகாலத்திற்கு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment