Sunday, August 23, 2015

பிரிட்டனில்,விமான சாகசம்:பார்வையாளர்கள் பரிதாப பலி!

Sunday, August 23, 2015
சஸ்செக்ஸ்: பிரிட்டனில், விமான சாகசத்தில் ஈடுபட்டிருந்த போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர்; ௧௦௦க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இங்கிலாந்தின் தென் கிழக்கு நகரம் ஒன்றில், அந்நாட்டு விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
 
அதில், பல விமானங்கள் பங்கேற்றன. அப்போது, 65 ஆண்டுகள் பழமையான, 'ஹாக்கர் ஹன்டர்' என்ற பழமையான போர் விமானம், விண்ணுக்கு சென்ற வேகத்தில் திடீரென தரையை நோக்கி இறங்கி, பார்வையாளர்கள் மீது மோதியது.விழுந்த வேகத்தில், வான் உயரத்திற்கு தீப்பற்றி எரிந்தது.இதில், அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். பார்வையாளர்கள், ஏழு பேர் இறந்தனர்; 1௦௦க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment