Saturday, August 22, 2015
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 72 வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக கோடிக் கணக்கான ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர்.
ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்காக இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள மட்டும் 50 மில்லியனுக்கும் அதிகளவு பணத்தை இந்த வேட்பாளர்கள் செலவிட்டுள்ளனர்.
ஊடகங்களில் செய்த பிரச்சாரங்களுக்காக இந்த வேட்பாளர்களில் பத்து பேர் சுமார் 100 முதல் 200 மில்லியன் ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர்.
ஊடகப் பிரச்சாரங்களைத் தவிர்ந்த ஏனைய பிரச்சாரங்களுக்காகவும் பாரியளவு பணம் செலவிடப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து செய்த ஆய்வுகளின் மூலம் சில வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக பாரியளவு பணத்தை செலவிட்டமை அம்பலமாகியுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.இதற்கு மேலதிமாக பிரதான அரசியல் கட்சிகளுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்த தகவல்களும் வெளியிப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment