Tuesday, August 04, 2015
மீண்டும் நாடாளுமன்ற கனவிலிருந்த விஜயகலா மகஸ்வரன் கனவில் மண்
விழத்தொடங்கியுள்ளது.யாழினில் யானை சின்னத்தினில் போட்டியிடும்
வேட்பாளர்கள் இரண்டு பட்டுப்போயுள்ளனர்.அவ்வகையினில் விஜயகலா மகேஸ்வரன் ஒரு
அணியாகவும் சுன்னாகம் குடிநீருக்காக போராடிய வைத்தியர் சிவசங்கர் மற்றொரு
தரப்பாகவும் பிரிந்துள்ளனர்.
இன்றிரவு சுன்னாகத்தினில் இடமபெற்ற ஜ.தே.கவின் பொதுக்கூட்டத்தை வைத்தியர் சிவசங்கர் அணி புறக்கணித்து விட்டது.அண்மையினில் அவரது அலுவலக தாக்குதலின் பின்னணியும் இத்தகைய சம்பவங்களின் தொடர்ச்சியே என கூறப்படுகின்றது.
இதனிடையே தனது மைத்துனியான விஜயகலாவுடன் முரண்பட்டு தேர்தலிலிருந்து விலகியிருந்த மகேஸ்வரனின் தம்பியும் ஜ.தே.கவின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான துவாரகேஸ்வரன் தற்போது வைத்தியர் சிவசங்கர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment