Tuesday, August 4, 2015

புலிகளினால் போசனை வழங்கப்பட்ட தமிழீழத்தின் ஆரம்பமான சமஷ்டி முறைமைக் கொள்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ளது: மகிந்த ராஜபக்ச!

Tuesday, August 04, 2015
புலிகளினால் போசனை வழங்கப்பட்ட  தமிழீழத்தின் ஆரம்பமான சமஷ்டி முறைமைக் கொள்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ளது:  மகிந்த ராஜபக்ச,
 
தமிழீழத்தின் ஆரம்பமான சமஷ்டி முறைமைக் கொள்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறான பிரிவினை நோக்க அமைப்புடன் அரசாங்கம் இணைந்து செயல்படுவது குறித்து வியப்பாக இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும், தம்மைப் பொறுத்தவரையில், நாட்டை துண்டாட இடந்தரப் போவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
 
ஸ்தம்பித்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து சுமார் 15 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் வழங்க உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

வான் வழியாக சென்ற நான் இன்று தரைவழியாக பயணிக்கின்றோம். இது எமது அரசாங்கத்தின் பாதை அபிவிருத்தியை காட்டுகின்றது.

எனினும் சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்திப்பதற்கு அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும், குருநாகலில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் மஹிந்த குறிப்பிட்டார்.
           

No comments:

Post a Comment