Tuesday, August 4, 2015

சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு வீடு வாடகை கொடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை : இங்கிலாந்து அரசு நடவடிக்கை}}

Tuesday, August 04, 2015
லண்டன் : பிற நாட்டவர் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க இங்கிலாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் பற்றி இங்கிலாந்து அறிவித்துள்ளது. 
புதிதாக கொண்டுவரப்படும் சட்டத்தின் அடிப்படையில், வாடகை ஒப்பந்தங்களை செய்துகொள்வதற்கு முன்னதாக வாடகைக்கு வருவோரின் குடியுரிமையை வீட்டு உரிமையாளர் சோதனை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் திரும்பத்திரும்ப தவறிழைப்போருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இந்தப் புதிய திட்டத்தின்படி, தஞ்சம் கோரிகளுக்கான நிதி உதவிகளும் நிறுத்தப்படவுள்ளன. பிரான்ஸின் கலே பகுதியில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைய நூற்றுக்கணக்கானவர்கள் முயற்சிப்பதால் கடும் நெறுக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

No comments:

Post a Comment