Tuesday, August 4, 2015

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினரின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போஷகர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை

Tuesday, August 04, 2015
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினரின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போஷகர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தலின் பின்னர் முடிவு எடுக்கப்படுமென ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.
 
ஐ.ம.சு.மு. ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார். அர்ஜுன ரணதுங்கவின் பிரசார கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பங்கேற்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், கட்சியை விட்டும் சென்றவர்களுக்கு ஆதரவு வழங்குவது தவறாகும். அத்தகை யோருக்கு எமது கட்சியின் போசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உதவியிருந்தால் அது தொடர்பில் மத்திய குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment