Sunday, August 2, 2015

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் 314 பேர் கைது!

Sunday, August 02, 2015
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் காவற்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காவற்துறை தேர்தல் முறைப்பாட்டு பிரிவிற்கு 215 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளது.

தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமை தொடர்பிலே இந்த முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவங்கள் தொடர்பில் 314 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
 
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது!

இந்த முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், அரச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06ம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள மற்றைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment