Saturday, July 18, 2015

காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் தலை துண்டித்த பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

Saturday, July 18, 2015
புதுடெல்லி:பாகிஸ்தானில் இயங்கும் லஸ்கர்–இ– தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அன்வர்பயஷ். காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சாங்ரில்லா என்ற இடத்தில் இவன் மற்றும் 2 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.
 
அதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்கள் அன்வர் பயஷ் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.
 
காஷ்மீர் எல்லையில் உள்ள சாங்ரில்லா என்ற இடத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அன்வர்பயஷ் மற்றும் 2 பயங்ரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சாங்ரில்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர்.
இதைக்கண்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில், பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர்
 
அன்வர் பயஷ் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அவனிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், செல்போன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
சுட்டுக்கொல்லப்பட்ட லஸ்கர்- இ-தொய்பா கமாண்டர் அன்வர் பயஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் பகுதிக்குள் நுழைந்து, அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் ஹேம்ராஜ் சிங் மற்றும் சுதாகர்சிங் ஆகியோரின் தலை துண்டித்து படுகொலை செய்தவன்.

No comments:

Post a Comment