Saturday, July 18, 2015
மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிக்கப்படும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அகற்ற போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.
இதன் பின்னர் மஹிந்த ராஜபக்சவை முழுமையான அதிகாரங்களுடன் கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக மாற்ற போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் திஸ்ஸ விதாரணவின் இந்த கருத்தானது, ராஜபக்சவினரின் எதிர்கால திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்....
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மோசடியாளர்களையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் பாதுகாத்ததாக விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
திருடர்களை தாம் தமது ஆட்சிக்காலத்தில் பாதுகாத்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். அவர் பாதுகாத்த திருடர்கள் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அமைச்சர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பாதுகாத்த திருடர்களும் மோசடியாளர்களுமே அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ, தவறு நடந்த இடத்திலேயே தண்டனையை வழங்க வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தற்போது நன்கு கற்றுணர்ந்துள்ளார்.
என்னிடமும் தவறு இருக்கின்றது. நான் தவறு செய்தவர்களை தண்டிக்கவில்லை என அவர் கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி அவரது அரசாங்கத்தில் இருந்தவர்களை பற்றி இவ்வாறு கூறவில்லை. போலி நாணயங்களுடன் சஜித் பிரேமதாசவின் சகோதரி பிடிப்பட்டார். பெண் என்பதால், அவருக்கு தண்டனை வழங்காது அவரை காப்பாற்றினார். இனிமேல் முன்னாள் ஜனாதிபதி அப்படி செய்ய போவதில்லை.தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment