Saturday, July 18, 2015

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 48 பேர் கைது!

Saturday, July 18, 2015
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் விதிகளை மீறிய குற்றத்துக்காக 48 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காவற்துறை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த பிரிவுக்கு தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 41 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவர்கள் மேற்கொள்கின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உடடியாக தகவல் வழங்குமாறும் காவற்துறையினர், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இவ்வாறான கவல்களை 119 என்ற அவசர காவற்துறை இலக்கத்துக்கோ, அல்லது, 011 2 54 38 11 மற்றும் 011 2 38 79 99 ஆகிய இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

தேர்தல் விதிகளின் படி, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதி தினம் முதல், தேர்தல் நிறைவடைந்த ஒரு வார காலம் வரையில், பேரணிகள், வாகன பேரணிகள் போன்றவற்றை நடத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெப்ரல் அமைப்பின் தகவல் படி, இதுவரையில் தேர்தல் விதிகளை மீறிய 157 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
           
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தேர்தல் சட்டம் மீறப்பட்டமை குறித்து 40 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்டமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேவேளை, தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஐவர் ஹபராதூவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்..

No comments:

Post a Comment