Saturday, July 18, 2015
2015ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக, 10 மாவட்டங்களின்
வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
அரச அச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த 15ம் திகதி முதல் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 10 மாவட்டங்களின் வாக்குச் சீட்டுகள் பூர்த்தியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டே அதிக நீளமான அமையும் என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
இது 29 தொடக்கம் 30 அங்குலங்கள் வரை நீண்டதாக காணப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment