Saturday, July 18, 2015

புலிகள் உறுப்பினர் கே.பி.க்கு மட்டும் தனியான விசாரணை அவசியமற்றது: சுஜீவ சேனசிங்க!

Saturday, July 18, 2015
குமரன் பத்மநாதன் (கே.பி)  தொடர்பாக ஜனாதிபாதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க இதனைத் தெரிவித்தார்.
 
கே.பி இலங்கையில் உள்ளாரா? இல்லையா? என்ற தகவல் அடங்கிய அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தான் கோரியிருந்த போதிலும் இதுவரை அந்த தகவல் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
புலிகள் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் அதிகமானோர் சிறையில் உள்ளனர். இவர்களில் பலருக்கு இன்னும்கூட வழக்கு தொடரமால் உள்ளது.

இந்த நிலையில் கே.பி.க்கு மட்டும் தனியான விசாரணை அவசியமற்றது எனக் குறிப்பிட்ட பிரதி நீதியமைச்சர், குறித்த சந்தேக நபர்கள் மீது நடத்தப்படும் விசாரணை போன்றே கே.பி மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment