Sunday, July 19, 2015
இந்திய பாகிஸ்தான் எல்லையில் சீன உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனாவில் ஆளும் கட்சியான சிபிசி (இர்ம்ம்ன்ய்ண்ள்ற் டஹழ்ற்ஹ் ர்ச் இட்ண்ய்ஹ) நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி என்ற ஊடகம் தலைநகர் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளதாவது:-
சீனாவின் தயாரிப்பான ஷஷஈஒஐ ல்ட்ஹய்ற்ர்ம் 3” என்ற உளவு விமானம் அதிநுணுக்கமானதும் அதிசக்தி வாய்ந்ததுமானதாகும். என்றும் இன்றுவரை இதை மிஞ்சிய உளவு விமானம் வேறு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தை பாகிஸ்தான் ராணுவம்தான் சுட்டு வீழ்த்தியது என்பதை சீனா உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவ உறவு பாதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக, தங்கள் நாட்டுப் பகுதியில் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததாகவும், அதை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது
இதற்கு மறுப்பு தெரிவித்த வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுட்டு வீழ்த்தியதாக காட்டப்பட்டுள்ள அந்த விமானம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல. என்றும் , இந்திய ராணுவத்தில் அதுபோன்ற உளவு விமானமே இல்லை. அந்த விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது போல தோன்றுகிறது என கூறினார்.

No comments:
Post a Comment