Sunday, July 19, 2015

பொது தேர்தலுக்கான காவற்துறையின் செலவு விபரம்: காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது!

Sunday, July 19, 2015
பொது தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்றல் ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் தேர்தலுக்கு அடுத்த நாள் வரை, காவற்துறை திணைக்களத்தின்  செயற்பாடுகளுக்காக 40 கோடி ரூபா செலவாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த கணக்கறிக்கை காவற்துறை திணைக்களத்தினால் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேர்தலின் போது, மேலதிக கொடுப்பனவாக 12 கோடி ரூபா செலுத்த நேரிடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றுவதற்காக 5 கோடி ரூபாயும், எரிபொருளுக்காக 8 கோடியே 80 லட்சம் ரூபாவும் செலவிடப்படவுள்ளது.

தொலைதொடர்புகளுக்காக 50 லட்சம் ரூபாவும், நலன்புரி செயற்பாடுகளுக்காக மேலும் 18 கோடி செலவாகும் என காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
           

No comments:

Post a Comment