Wednesday, July 29, 2015

தோல்வியைத் தவிர்த்துக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளார்: ஜோன் செனவிரட்ன!

Wednesday, July 29, 2015
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய பொய் வாக்குறுதிகளை அளித்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

ஒரு மில்லியன் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாக பிரதமர் அளித்த வாக்குறுதி பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தினபுரி எலபாத்தவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே அரச சேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பு செய்வதனை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ரத்து செய்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து பொதுத் தேர்தலை முத்தரப்பு போட்டியாக முன்னெடுக்க முயற்சித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியைத் தவிர்த்துக்கொள்ள ரணில் விக்ரமசிங்க பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment