Wednesday, July 29, 2015

யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் கைது!

Wednesday, July 29, 2015
யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
 
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்­லரின் ஆலோ­ச­னைக்கு அமைய யாழில் இருந்து கொழும்­புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்த ஆகி­யோ­ரு­ட­னான குழு­வுடன் இணைந்து அவரை இவ்­வாறு கைது செய்­த­தா­கவும், நேற்று இரவு 11.00 மணி­யாகும் போதும் அவ­ரிடம் விசா­ர­ணைகள் தொடர்ந்து வந்­த­தா­கவும் பொலி ஸார் தெரி­வித்­தனர்.
 
காணாமல் போன­தாக கூறப்­பட்ட திரு­வ­ளவன் தம்­பி­ராஜா அவ­ரது சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்­புக்கு பஸ் வண்­டியில் வந்­துள்­ளமை நேற்று இரவு வரை இடம்­பெற்ற ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அத­னூ­டாக அவர் கடத்­தப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும்  தெரி­வித்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர், முறைப்­பாட்டின் பின்­னணி மற்றும் சம்­ப­வத்தின் பின்­னணி தொடர்பில் தெரிந்­து­கொள்ள விஷேட விசா­ர­ணை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.
 
இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­க ளில் குறித்த காணாமல் போனமை தொடர்­பி­லான முறைப்­பா­டா­னது உள் நோக்கம் ஒன்றின் அடிப்­ப­டையில் செய்­யப்­பட்­டது என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் பல்வேறு கோணங் களில் தொடர்வதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் உறுதிப்படுத்தினார்.

No comments:

Post a Comment