Tuesday, July 28, 2015

வடக்குக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Tuesday, July 28, 2015
வடக்குக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். விசேட வானூர்தி மூலம் வருகை தந்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வரவேற்றார். யாழ் வந்த ஜனாதிபதி, முதலில் யாழ். கோயில் வீதியிலுள்ள கைலாச பிள்ளையார் ஆலயத்துக்கு விஜயம் செய்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
 
அதனைத் தொடர்ந்து, கோவில் வீதியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்றார். இதேவேளை, கிளிநொச்சி சென்ற ஜனாதிபதி மைத்திரி அங்கு சதொச பல்பொருள் அங்காடியைத் திறந்துவத்தார்.
 

காணாமல்போனோர் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் பொருட்டு காணாமல்போனோரை ஆராயும் விசேட செயலகம் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படும்

இதன்மூலம் பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல்போனோரின் உறவினர்களுக்கு உறுதியளித்துள்ளார் 

மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.

காணாமல்போனோரின் உறவினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட  அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் இல்லத்தில் சந்தித்த ஜனாதிபதி அவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்

நீண்டகாலமாக தமது உறவினர்களின் நிலை அறியாமல் தாம் தொடர்ந்தும் துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக காணமல்போனோரின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்தனர்

 
இதன்போது பதிலளித்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் நிறைவுபெற்றதன்பின்னர் காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விசேட செயலகம் ஒன்றை தாம் அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டார்

ஜனாதிபதியுடனான சந்தி;ப்பின்போது வடக்குகிழக்கின் எட்டுமாவட்டங்களில் காணாமல் போனோரின் உறவுகள் என இறுநூறு பேர் வரை பங்கேற்றனர் என்று எமது யாழ்ப்பாண செய்தியாளர் அறிவித்துள்ளார்.

இதன்பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி பயமற்ற சூழ்நிலை ஒன்றை தாம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்

No comments:

Post a Comment