Wednesday, July 29, 2015

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஈடாக ஐக்கியதேசியக்கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக: பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்!

Wednesday, July 29, 2015
யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஈடாக ஐக்கியதேசியக்கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

பொதுத்தேர்தல் பிரசாரங்களின்போது இந்தநிலையை பார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிடும் நிலையில் ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

புசல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டார்

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ ராதாகிருஸ்ணன், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் அமைக்க வாக்களிக்குமாறு பிரசார நிகழ்வு ஒன்றின்போது கேட்டுக்கொண்டார்.

தோட்ட உட்கட்டமைப்புத்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் பொகவந்தலாவையில் இடம்பெற்ற நிகழ்வின்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வுக்குறித்து வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment