Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் உடலுக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்!

Tuesday, July 28, 2015
டெல்லி:மறைந்த அப்துல் கலாம் உடல் டெல்லியில்  உள்ள பாலம் சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.
வெள்ளை ஆடை உடுத்தி வந்த பிரதமர் மோடி, கலாம் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் முக்கிய விஷயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment