Wednesday, July 1, 2015

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி இணக்கம்!

Wednesday, July 01, 2015
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அறிவித்துள்ளார்.
 
இந்த சந்திப்பு கண்டியில் உள்ள லொஹான் ரத்வத்தையின் இல்லத்தில் நடைபெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவருடன் ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த், சுதந்திரக் கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் கலந்து கொண்டதாக அறிய வருகிறது.
 
ஐ.ம.சு.மு.வில் உள்ள சகலரையும் இணைத்து ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதோடு பேச்சுவார்த்தை சுமுகமாக இடம்பெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 
ஐ.ம.சு.மு.வினுள் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்றது. கட்சியினுள் ஒற்றுமையை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழு ஜனாதிபதியை சந்தித்ததோடு இடது சாரி கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பும் இடம்பெற்றது.
 
இது தவிர ஐ.ம.சு. மு.கட்சிகளுக்கிடையிலும் சந்திப்புகள் இடம்பெற்றதோடு எதிர்க்கட்சித் தலைவர், சு.க மற்றும் ஐ.ம.சு.மு. செயலாளர் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதாக அறிய வருகிறது.
 
மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிட அவகாசம் வழங்கப்படாது என நேற்று முன்தினம் பரவலாக தெரிவிக்கப்பட்டது. சு.க மற்றும் ஐ.ம.சு.மு. செயலாளர்களும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி தனது இணக்கத்தை வழங்கியுள்ளதாக அறியவருகிறது.
 
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி நேற்று மாலை ஐ.ம.சு.மு தலைவர்களை நேற்று மாலை சந்திக்க ஏற்பாடாகி யிருந்ததோடு தேர்தலில் குதிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை அவர் இன்று (1) உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளார்.
 
இதேவேளை ஐ.ம.சு.மு. தலைவர்கள் சிலர் நேற்று மாலை தேர்தல் ஆணையாளரை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.

No comments:

Post a Comment