Wednesday, July 1, 2015

வடக்குகிழக்கில் உள்ள தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமான சில நிலங்களை புலிகள் சார்பு புலம்பெயர் அமைப்பொன்றிற்கு விற்பதற்கு அரசாங்கம் திட்டம்: ஞானசார தேரர்!

Wednesday, July 01, 2015
இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமான சில நிலங்களை புலிகள் சார்பு புலம்பெயர் அமைப்பொன்றிற்கு விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நிலத்தினை 450 மில்லியன் அமெரிக்க டொலரிற்கு புலம்பெயர் அமைப்பொன்றிற்கு டிசம்பர் 20 திகதிக்கு முன்னர் அரசாங்கம் வழங்கவுள்ளது.இங்கு துரித உணவுகளை விற்பனை செய்யும் பாரிய வியாபார நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டை தற்போது புலிகளும், ரோவும், மொசாட்டும், சிஐ.ஏயும் ஆட்சி புரிகின்றன.

வடக்குகிழக்கில் இராணுவம்ஹோட்டல்களை, உணவகங்களை நடத்துகின்றது , ஆனால் இராணுவத்தை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்காக அரசாங்கம் மக்களை அவர்களிற்கு எதிராக தூண்டுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி இன்னமும் பழையபாதையிலேயே பயணிக்கின்றார், முஸ்லீம்கள் அவரிற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தவில்லை. வடக்கில் ஆபத்தான நிலை காணப்படுகின்றது,இராணுவம் முகாம்களிற்குள் முடக்கப்பட்டுள்ளது. நாட்டில் 40000 மாலைதீவு பிரஜைகள் கண்காணிப்பு இன்றி நடமாடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment