Saturday, July 04, 2015
மைத்திரி - ரணில் கூட்டணி இல்லாமல்போய் தற்போது மைத்திரி - மஹிந்த கூட்டணி உருவாகியுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
நாட்டில் மீண்டும் ஓர் அரசியல் புரட்சியை ஏற்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்கள் கண்களில் மண் தூவி மக்களை ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துள்ளது. அதனை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. நாட்டை முன்னேற்ற மைத்திரி - ரணில் கூட்டணியால் முடியாது. மைத்திரி - மஹிந்த கூட்டணியால் மாத்திரமே முடியும். அந்தக் கூட்டணி உருவாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷ திருடன் என்றால் அவருக்கு வேட்பு மனு கொடுப்பதுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறது. திருடன் என்றால் இலகுவாக தோற்கடிக்க முடியும்தானே? மஹிந்த வந்தால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டம் செய்கின்றது. எனவே, பழைய கோபதாபங்கள், வாத விவாதங்களை மறந்து
தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைய வேண்டும். எதிர்வரும் 9ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்குபற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றேன்" - என்றார்.
No comments:
Post a Comment