Monday, July 6, 2015

அரச பணியாளர்கள் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, July 06, 2015
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் காலத்தில் அரச பணியாளர்கள் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

கடந்த காலங்களைப் போன்று அரச அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்பட்டு நாட்டின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

பிறரின் தலையீடு மற்றும் அழுத்தங்கள் இன்றி செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.
 
விரைவில் அரசாங்கமொறை அமைக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதிமொழி வழங்கியுள்ளார்.

சமுர்த்தி அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் தாம் அரசாங்கத்தை அமைக்கப் போவதாகவும் அதன் பின்னர் நலன்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல நோக்கத்துடன் கடமையாற்றியவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment