Sunday, July 19, 2015

மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தேசத் தலைவராக்குவதே எமது அணியின் எதிர்காலத் திட்டம்: பந்துல குணவர்தன!

Sunday, July 19, 2015
மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தேசத்தலைவராக்குவதே எமது அணியின் எதிர்காலத் திட்டமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஹோமாகம நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்தார்
 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பிரதானமாக மூன்று விடயங்கள் நடைபெற்றுள்ளன. ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் நீக்கப்படுள்ளது, ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப பிரதமரை நியமிக்கும் அதிகாரம் நீக்கப்படுள்ளது, ஜனாதிபதிக்கு விருப்பமானோரை அமைச்சரவைக்கு நியமிக்கும் அதிகாரம் நீக்கப்படுள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்காகவே இந்த ஆடை தைக்கப்பட்டது.
 
ரணில் விக்ரமசிங்கவுக்காக தைக்கப்பட்ட இந்த ஆடையினை எதிர்வரும் 17ஆந் திகதி மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவித்து அழகுபார்க்கவிருக்கிறார்கள். இந்த ஆடையினை அணிந்து கொண்டதன் பின்னர் முழு நாடும் எதிர்பார்க்கின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை இல்லாதொழிக்கும் நடவடிக்கையினை எதிர்வரும் பாராளுமன்றத்தின் மூலம் மேற்கொள்வோம்.
இதன் மூலம் நாட்டின் தேசத் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாறுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment