Sunday, July 19, 2015
ஐ. ம.சு.கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டமைப்பின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலின் பின்னர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட தேர்தல் வேலைத்திட்டப் பணிகளுக்குப் பொறுப்பான நபராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment